திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவல்? நாலாபுறமும் சிதறிய ஓடிய பக்தர்கள்.. அலர்ட் கொடுத்த போலீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 1:52 pm

திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவல்? நாலாபுறமும் சிதறிய ஓடிய பக்தர்கள்.. அலர்ட் கொடுத்த போலீஸ்!!!

திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து ஈமெயில் ஒன்று இன்று வந்தது.

இதனால் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்த போலீசார், இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஆகியோருக்கு தெரிவித்தனர்.

தொடர்ந்து திருப்பதி மலை முழுவதும் ஹை அலர்ட் எச்சரிக்கை விடுத்த போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பயணிக்கும் பக்தர்கள், நடந்து மலையேறி செல்லும் பக்தர்கள்,ஆகியோர் உட்பட அனைத்தும் தீவிர சோதனை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது தவிர திருப்பதி மலை முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்திய போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிசி கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுண்டர், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், மொட்டை போடும் நிலையங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள் கையில் எடுத்து செல்லும் உடைமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி, போலீசாருக்கு கிடைத்த இமெயில் வெறும் புரளி. எனவே பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். திருப்பதி மலையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!