அடேங்கப்பா இது புதுசா இருக்கே… மத்திய பிரதேசம் பெயரில் ஐபிஎல் அணி… காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதி!!

அடேங்கப்பா இது புதுசா இருக்கே… மத்திய பிரதேசம் பெயரில் ஐபிஎல் அணி… காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதி!!

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக 64,532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிச. 3ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது.

இதனால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.

இந்த சூழலில் தலைநகர் போபாலில் காங்கிரஸ் மாநில தலைவர் கமல்நாத் சட்டப்பேரவை தேர்தல் (வாக்குறுதி) அறிக்கையை இன்று வெளியிட்டார்.

இந்த தேர்தல் வாக்குறுதியில். மத்திய பிரதேசத்தின் பெயரில் தனி ஐபிஎல் அணி உருவாக்கப்படும். அனைத்து மக்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 27% ஓபிசி ஒதுக்கீடு, விவசாயிகளின் ரூ.2 லட்சத்துக்கு மேல் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பிரதேசத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.5,00க்கு வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

மொத்தம் 106 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் முதல் பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகள் வரை அனைத்து வகுப்புகள் மற்றும் பிரிவுகள் அடங்கிய தொடர் வாக்குறுதிகள் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பள்ளிக்கு தடா போட பாலியல் கொடுமையைக் கையிலெடுத்த +2 மாணவி.. இறுதியில் ட்விஸ்ட்!

பள்ளிக்குச் செல்ல விரும்பாத நிலையில், போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 12ம் வகுப்பு மாணவிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.…

39 minutes ago

ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா தனுஷ்…’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனம்.!

ரசிகர்களுக்கு கோபமா இல்லை மகிழ்ச்சியா தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல வித்தைகளை கையில் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு,ஆனால் தனுஷ்…

1 hour ago

அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான குட்…

1 hour ago

உதயநிதி பேச்சை திமுக ஐடி விங் கேட்கவில்லையா? தமிழகம் முழுவதும் பரபரப்பான அரசியல் களம்!

உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை நோக்கி எழுப்பிய கேள்வி, திமுக ஐடி விங்கால் திருப்பி விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை:…

1 hour ago

ரோட்டில் நடந்து சென்ற மாணவியிடம் சில்மிஷம்.. சிசிடிவி மூலம் சிக்கிய வாலிபர்!

கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவி தனது வீட்டின் அருகே உள்ள அழகுகலை நிலையத்திற்கு பயிற்சி எடுத்து வருகிறார். அவர்…

2 hours ago

This website uses cookies.