கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர்? மதுபான கொள்கை விவகாரத்தில் திடீர் திருப்பம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 ஏப்ரல் 2023, 1:29 மணி
Kejri -updatenews360
Quick Share

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசின் மதுபானக்கொள்கை ஊழல் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அங்கு மதுபான வியாபாரிகளுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக கடந்த 2021-22-ம் ஆண்டு மதுபானக்கொள்கையை கெஜ்ரிவால் அரசு வெளியிட்டது.

இந்த ஊழலில், மதுபானக்கொள்கையை உருவாக்கிய கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியாவின் மீது சி.பி.ஐ.யின் சந்தேகப்பார்வை படிந்தது.

அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது அலுவலகம் என பல இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது. மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அவர் ஆஜரானபோது, பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி அதன் இறுதியில் கைது செய்தது.இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இது அரசியல்ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிஷ் சிசோடியா தனது துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது இந்த மதுபானக்கொள்கை ஊழலின் உச்சக்கட்ட நடவடிக்கையாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது சி.பி.ஐ.யின் பார்வை படிந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி சிபிஐ முன் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆனார்

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 430

    0

    0