மாலத்தீவை குறி வைக்கிறதா இந்தியா? பிரதமர் மோடி விசிட் குறித்து அமைச்சர் சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2024, 5:15 pm
மாலத்தீவை குறி வைக்கிறதா இந்தியா? பிரதமர் மோடி வருகை குறித்து அமைச்சர் சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!!
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது” என பதிவிட்டிருந்தார்.
மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என கூறியுள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சரின் இந்த பதிவின் மூலம் இந்தியாவுக்கும் – மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடதக்கது.
0
0