நான் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பதை சிவன் தடுக்க முயற்சி? சுயசரிதையில் சோம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 7:59 pm
ISRO - Updatenews360
Quick Share

நான் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பதை சிவன் தடுக்க முயற்சி? சுயசரிதையில் சோம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு!!

இஸ்ரோ தலைவராக இருப்பவர் கேரளத்தை சேர்ந்த சோம்நாத். இவருக்கு முன்பு தலைவராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த கே சிவன் ஆவார். இவரது பதவிக்காலத்தில் சந்திரயான் 2 திட்டமானது நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்டது.

அதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் தரை பரப்பில் மோதி சிதறியது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் நிலவின் தென் துருவத்திற்கு செல்லும் அளவுக்கு குறைந்த செலவில் செயற்கைகோள் செலுத்தியது இஸ்ரோவுக்கு பெருமையை சேர்த்தது.

இந்த நிலையில் நிலவு குடிச்ச சிங்கங்கள் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார் தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத். இவர் தான் எழுதிய புத்தகத்தில்தான் சிவன் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.

தனது சுயசரிதை புத்தகத்தில் சோம்நாத் கூறியிருப்பதாவது: எனக்கும் சிவனுக்கும் 60 வயது நிறைவடைந்தவுடன் எங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ்.கிரண்குமார் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு எங்கள் இருவரின் பெயர்களும் இஸ்ரோ தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனக்கு கிடைக்கும் என நான் நம்பியிருந்த நிலையில் அந்த பதவி சிவனுக்கு கொடுக்கப்பட்டது.

இஸ்ரோ தலைவரான பிறகு சிவன், அதற்கு முன்பு வகித்து வந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை.

விக்ரம் சாராபாய் பதவி குறித்து சிவனிடம் நான் கேட்டும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார். அந்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி.என்.சுரேஷின் தலையீட்டை அடுத்து 6 மாதங்கள் கழித்து அந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டேன். இஸ்ரோ தலைவராக 3 ஆண்டுகள் சேவைகளை செய்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு பதிலாக சிவன் தனது பதவியை நீட்டிக்கவே முயற்சித்தார்.

என்னை தலைவராக்கக் கூடாது என்பதற்காகவே விண்வெளி ஆணையத்தில் யாரை தலைவராக்குவது என்ற ஆலோசனைக்கு யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநரை விட்டு தேர்வு செய்தார்கள் என நான் கருதுகிறேன்.

இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 நிலவில் செலுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க என்னை அழைத்து செல்லாமல் ஒதுக்கியே வைத்தனர். சந்திரயான் 2 தோல்வி அடைந்ததற்கு நிறைய சோதனைகளை செய்யாததே காரணம், கிரண்குமார் தலைவராக இருந்த போது சந்திரயான் 2 திட்டத்தில் சிவனை நிறைய மாற்றங்களை செய்திருந்தார். அளவுக்கு அதிகமான விளம்பரமும் சந்திரயான் 2 திட்டத்தை கடுமையாக பாதித்திருந்தது.

சந்திரயான் 3 வெற்றி அடைந்த போது பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவிக்க தனிப்பட்ட முறையில் வந்தது எனது மிகப் பெரிய திருப்தியாகும். சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்தது ஏன் என்பதற்கான முக்கிய 5 காரணங்களை விசாரணை குழு கண்டுபிடித்துள்ளது.

சாப்ட்வேரில் தவறுகள், நிறைய பிரச்சினையை உருவாக்கியது. தவறான அல்காரித்ததால் எல்லாம் நடந்தன. இந்த தவறுகள் எல்லாம் சந்திரயான் 3 யில் நடக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன் என சோம்நாத் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கே சிவனிடம் கேட்ட போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத் புத்தகத்தில் என்ன எழுதியிருந்தார் என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே இதுகுறித்து நான் எந்த கருத்தையும் கூற முடியாது என தெரிவித்தார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 495

    0

    0