தெலங்கானாவில் போட்டியிடுகிறாரா சோனியா காந்தி? டெல்லிக்கே சென்று வலியுறுத்திய முதலமைச்சர் : காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 2:49 pm

தெலங்கானாவில் போட்டியிடுகிறாரா சோனியா காந்தி? டெல்லிக்கே சென்று வலியுறுத்திய முதலமைச்சர் : காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் மற்றுமு் ரூ.10 லட்சம் சுகாதார திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் சிலிண்டரை ரூ.500க்கு வழங்குவது மற்றும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதி உள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்க வேண்டும். இதன்மூலம் காங்கிரஸ் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட சோனியா காந்தி முடிவெடுத்து விரைவில் சொல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவில் போட்டியிடுகிறாரா? என்ற எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!