பஞ்சாப்பில் ஆட்சி உடைகிறதா? ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 10 பேரிடம் பேரம் : அதிர்ந்து போன அரவிந்த கெஜ்ரிவால் !!
Author: Udayachandran RadhaKrishnan14 September 2022, 2:23 pm
பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பா.ஜ., சதி செய்வதாகவும், எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் பஞ்சாப் நிதியமைச்சர் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‛ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., பேரம் பேசி வலை விரிக்கிறது. எம்எல்ஏ.,க்களுக்கு தலா ரூ.20 கோடி வழங்குவதாக பேரம் பேசியுள்ளது’ எனக் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‛பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., திட்டமிடுகிறது. எங்கள் கட்சியின் 10 எம்எல்ஏ.,க்களை பா.ஜ., அணுகியுள்ளது. ஆட்சியை உடைக்க பா.ஜ., முயற்சிக்கிறது’ எனக் குற்றம் சாட்டினார்.