இப்படியும் ஒரு மரணமா? மிடில் பெர்த் உடைந்து பயணி பரிதாப பலி : ரயிலில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 7:07 pm

கேரளா மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் . இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

62 வயதாகும் மரத்திகா பணி நிமித்தமாக கடந்த வாரம் மாமல்லபுரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் பயணம் செய்முள்ளார்.

மரத்திகா அலிகானுக்கு பெர்த்தில் கீழே இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது இரவு உணவை முடித்துக் கெண்டு ஒதுக்கப்பட்டட பெர்த் இருக்கையில் படுத்துறங்கினார்.

தெலுங்கானா வாரங்கல் பகுதியை ரயில் கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்த மரத்திகா அலிகான் மீது மிடில் பெர்த் உடைந்து விழுந்தது. இதில் கழுத்து எலும்புகள் உடைந்து நரம்புபாதிப்படைந்தது. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் அவர் கை கால்கள் செயலிழந்துவிட்டன.

இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீசார், வாரங்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!