இந்தளவு வெறுப்பு பேச்சா.. மோடி மாதிரி எந்த பிரதமரும் இப்படி கீழ்த்தரமா.. மன்மோகன்சிங் தாக்கு!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2024, 5:36 pm
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:- இந்த தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் பிரசார உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது வெறுக்கத்தக்க உரைகளை வழங்கியதன் மூலம், பொது உரையின் (பிராசரம், பேச்சுகள்) கண்ணியத்தையும், பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைக்கிறார்.
பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்.
அவரின் பிரசாரம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை. தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் (அக்னிவீர் திட்டம்) மட்டுமே என பாஜக நினைக்கிறது.
இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது.கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில், இதுபோன்ற வெறுப்பூட்டும், பாராளுமன்றத்திற்கு விரோதமான வார்த்தைகளை கூறியதில்லை.
மேலும் படிக்க: I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாருனு சொல்ல 48 மணி நேரம் எதற்கு..? காங்கிரஸ் பதிலடி!
அவர் என்னிடம் சில பொய்யான அறிக்கைகளையும் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து காட்டியதில்லை. அது பாஜக-வுக்கு மட்டுமே உரித்தானவை என அவர் தெரிவித்துள்ளார்.