காளஹஸ்தி கோவிலில் இஸ்ரோ தலைவர் தரிசனம் : நாளை விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்…. வெற்றியடைய வேண்டி வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2022, 12:31 pm
திருப்பதி: நாளை எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் சிறிய வகை செயற்கைகோள் திட்டம் வெற்றியடைய காளஹஸ்தி கோவில் இஸ்ரோ தலைவர் சிறப்பு வழிபாடு செய்தார்.
குறைந்த தூரம் பயணித்து விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்தும் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டை நாளை காலை மணி 9.18 க்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
முதன்முறையாக இந்த திட்டத்தை நாளை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை காளஹஸ்தி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த இஸ்ரோ தலைவர் சோமநாத், எஸ் எஸ் எல் வி டி 1 ராக்கெட்டின் மாதிரியை காளகஸ்தீஸ்வரர் திருவடிகளில் சமர்ப்பித்து சிறப்பு பூஜை நடத்தினார்.
நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த இஸ்ரோ குழுவினர் ஏழுமலையான் திருவடிகளில் ராக்கெட் மாதிரிகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தியது குறிப்பிடத்தக்கது.