புத்தாண்டு துவங்கியதும் இஸ்ரோவின் முதல் வெற்றி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 10:23 am

புத்தாண்டு துவங்கியதும் இஸ்ரோவின் முதல் வெற்றி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்!!

இந்தியா, 2024 ஆண்டின் முதல் நாளான இன்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.

மேலும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைகோள் 500-700 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்த பட உள்ளது. விண்வெளியில் உள்ள தூசு, நெபுலா, கருந்துளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி