காங்கிரஸ் கட்சிக்கு 100 தொகுதி கூட கிடைப்பது சந்தேகம் : மீண்டும் குண்டை தூக்கிப் போட்ட பிரசாந்த் கிஷோர்!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2024, 7:09 pm
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு கட்டங்கள் நிறைவு பெற்றது. 7வது கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.
மேலும் படிக்க: என் மேலயே கை வைக்கறியா? உன் பொண்டாட்டி உசிரோட இருக்க மாட்டா : ஓடும் ரயிலில் பயணிகளை மிரட்டிய கும்பல்!
நாடாளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை.
காங்கிரஸ் 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? என தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளிலும், 2019-ம் ஆண்டில் 52 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.