இனி சுலபம் தான் : சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த தேவசம் போர்டு… இன்று முதல் அமலானது புதிய விதி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 10:04 am

இனி சுலபம் தான் : சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த தேவசம் போர்டு… இன்று முதல் அமலானது புதிய விதி!!

சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த தரிசன நேரம் 17 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 பக்தர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறினால், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியும்.

ஒரு நாளைக்கு 17 மணிநேரம் ​​கோவில் திறந்திருக்கும் போது பதினெட்டாம் படிகளில் ஏறக்கூடிய அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை 76,500 ஆக இருக்கும். தரிசன நேரத்தை அதிகரித்தால், முந்தைய திருவிழாக் காலத்தில் செய்ததைப் போல, ஒரே நாளில் மொத்தம் 85,500 பக்தர்கள் தரிசனம் செய்யலாம் கூறப்பட்டது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பக்தர்களுக்கான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், பக்தர்கள் தரிசனத்திற்கு 15 முதல் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். பக்தர்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று கூறினார். சபரிமலையில் பக்தர்களுக்கு உதவும் வகையில் போதிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், போதிய ஆம்புலன்ஸ் சேவைகள் கூட கிடைக்கவில்லை என்றும் சதீசன் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 536

    0

    0