ஜெகன் ஆட்சி ஊழல் ஆட்சி.. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் : ஆந்திராவில் அமித்ஷா பிரச்சாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 6:21 pm

கெஜன் ஆட்சி ஊழல் ஆட்சி.. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் : ஆந்திராவில் அமித்ஷா பிரச்சாரம்!

ஆந்திர பிரதேசம் தர்மவரத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் மோடி சதம் அடித்துள்ளார். இன்று நான் உங்களுக்கு சொல்கிறேன். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க நாடு முழுவதும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆந்திராவில் ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராகுல் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் பிரதமராகத் தகுதியற்றவர்கள்.

ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன. ஆந்திராவின் அமராவதியை மீண்டும் தலைநகராக்க வேண்டும் என்பதற்காக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 315

    0

    0