கேரளாவில் ரிலீஸ் ஆகாத ஜெயிலர் திரைப்படம்… காரணமே ரஜினி தானாம் ; அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 9:44 am

கேரளாவில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானது. கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதேவேளையில் ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகியுள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இப்படமும் இன்று வெளியாக இருந்தது. ஆனால், மலையாளத்தில் மட்டுமாவது ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மறுத்து விட்டனர்.

இந்த படத்தை நம்பி தான் தன் எதிர்காலமே இருப்பதாக மலையாள ஜெயிலர் படத்தின் இயக்குனர் சக்கீர் மடத்தில் கண்ணீர்மல்க பேட்டி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் தனது படத்துக்கு 40 திரையரங்குகள் மட்டும் ஒதுக்கிவிட்டு, ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு 400 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டமும் நடத்தினார்.

ஆனால், அவரின் குரலுக்கு அம்மாநில திரைத்துறையும் இசைவு தெரிவிக்காததால், வேறுவழியில்லாமல் மலையாள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 18ம் தேதி மலையாள ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…
  • Close menu