ஹுக்கும்… டைகர்கா ஹுக்கும்… வெளியானது ஜெயிலர் திரைப்படம் ; அலப்பறை போடும் ரஜினி ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 8:49 am

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பெங்களூரூவில் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வருகிறது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது.

கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதிகாலை படம் வெளியானதால், விவேக் நகர் பகுதியில் உள்ள தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு ‘ஜெயிலர்’ வெளியாகவுள்ளது. இதையொட்டி, ரசிகர்களில் திரையரங்கில் ஆட்டம், பாட்டத்துடன் திரண்டு வருகின்றனர். காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!