ஆபாச படம் எடுத்து மிரட்டிய ‘ஜிலேபி பாபா’… 63 வயதில் 120 பெண்கள் பலாத்காரம்.. போலீசாரிடம் சிக்கிய ஆபாச வீடியோ : விசாரணையில் ஷாக்!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 9:39 pm

120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜிலேபி பாபா என்னும் சாமியாரை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்.

அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. இவர் தனது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜிலேபியை பிரசாதமாக கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் மீதான பாலியல் பலாத்கார குற்ற வழக்குகளில் அரியானா மாநில நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதில், அவர் குற்றவாளி என அறிவித்து, 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 14 ஆண்டுகளும், பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 5 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜிலேபி பாபா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதாவது, அந்த பெண்கள் மீது ஆவி புகுந்திருப்பதாக கூறி பயத்தின் காரணமாக, அவர்களை சூனிய பூஜைகளில் சுய விருப்பத்துடன் கலந்து கொள்ள வைக்கிறார். தந்திர வித்யா சடங்குகளின் போது, அவர் அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தார்.

அதுமட்டுமின்றி, வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார். ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார், என தெரிவித்துள்ளார்.

ஜிலேபி பாபாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது அவரது அறையில் இருந்து போதை மாத்திரைகள், பூஜை பொருள்களை போலீசார் கைப்பற்றினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 616

    0

    0