ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ரஜோரி மாவட்டத்தின் பார்கல் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, அவர் நிற்குமாறு கூறிய பாதுகாப்பு படையினர் மீது அந்த நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டனர்.
ஆனால், இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலிவ் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.