பணியிட மாற்றம்.. ஆசிரியரை பிரிய மனமில்லாமல் அவர் சென்ற பள்ளியில் இணைந்த 150 மாணவர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 2:54 pm

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது.

அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் அங்கு சீனிவாஸ் என்பவர் ஆசிரியர் வேலைக்கு சென்றார்.

மாணவர்கள் மீது அவருக்கு இருந்த அக்கறை,பெற்றோரிடம் இருந்த பிணைப்பு ஆகியவற்றை தொடர்ந்து அந்த பள்ளியின் மாணவர்கள் வருகை 250 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு அவரை அதே பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கபெல்லிகூடா கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக பணியிட மாற்றம் செய்தது.

இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர் ஆகியோர் அவரை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அரசு உத்தரவை மீரா இயலாது என்று கூறிய ஸ்ரீநிவாஸ் பணியிட மாற்றத்தின் அடிப்படையில் அந்த பள்ளிக்கு சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வந்த 250 மாணவ மாணவியர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் டிசி வாங்கிக்கொண்டு தாங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்கபெல்லிகூடா கிராமத்தில் சீனிவாஸ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். இதனால் மீண்டும் போனக்கல் கிராம ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…