பாதாம் பாடல் பாடிய வியாபாரிக்கு விபத்து : ICUல் அனுமதி…சம்பாதித்த பணத்தில் வாங்கிய காரால் வந்த வினை!!!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2022, 1:39 pm
வட இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் பாதாம் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் பாதாம் விற்பனை செய்யும் போது ஒரு பாடலை பாடி விற்பனை செய்வார். இவர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அவர் பாடிய வித்தியாசமான பாட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. இதையடுத்து வியாபாரி பாடிய பாடல் வரியையே அடிப்படையாக வைத்து கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங்க வெளியாகி பயங்கர ஹிட் ஆனது.
இந்த பாடலை 40 லட்சத்திற்கு மேற்ப்ட்டவர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். மேலும் பிரபலங்கள் மத்தியில் மவுசான இந்த பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து பதிவேற்றி வருகின்றனர்.
கச்சா பாதாம் பாடல் மூலம் பிரபலமான இவர் பெயர் பூபன் பட்யகர். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது சொந்த ஊரில் காரை ஓட்டி பழகும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.