கவனத்தை ஈர்த்த கடப்பா.. சொந்த மாமாவை எதிர்த்து களமிறங்கும் YS ஷர்மிளா : மாஸ்டர் பிளான்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 4:52 pm

கவனத்தை ஈர்த்த கடப்பா.. சொந்த மாமாவை எதிர்த்து களமிறங்கும் YS ஷர்மிளா : மாஸ்டர் பிளான்!

பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

  • D Imman latest interview என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!