காங்கிரசுக்கு அடித்தது ஜாக்பாட்… கட்சியில் ஐக்கியமான சூப்பர் ஸ்டாரின் மனைவி… மனைவிக்காக களத்தில் இறங்கும் பிரபல நடிகர்…!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 1:54 pm

விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சிவராஜ் குமாரின் மனைவி கீதா கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகின் முக்கியமான நடிகர் ராஜ்குமார். இவரது மூத்த மகன் சிவராஜ் குமார். இவரும் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு பலமுறை அரசியல் வாய்ப்புகள் எட்டிப்பார்த்தாலும், ஒருபோதும் அவர் அரசியலில் நுழையவில்லை.

இவரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வனத்தில் வைத்து இருந்தபோது, கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் ஆடிப் போயின. தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பத்திரமாக ராஜ்குமார் மீட்கப்பட்டார். அவர் மறைந்து இருந்தாலும், இன்றும் கன்னட உலகம் அவரைப் போற்றுகிறது.

இதுவரையில் அவரது குடும்பத்தினர் அரசியலில் கால் பதிக்காத நிலையில், சிவராஜ் குமாரின் மனைவி கீதாவோ முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் கொண்டவராவார். அவரது தந்தை எஸ். பங்காரப்பா கர்நாடகா முன்னாள் முதலமைச்சராக இருந்தவராவார். பங்காரப்பாவின் மகன்களான மது பங்காரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்து, தற்போதைய தேர்தலில் சொரபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் குமார் பங்காரப்பா பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் கட்சியில் சேருவது தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வரும் நியில், தனது மனைவி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு சிவராஜ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது மனைவியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று சிவராஜ் குமார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 489

    0

    0