நடிகர் சித்தார்த்தை பேச விடாமல் விரட்டிய கன்னட அமைப்புகள் : மன்னிப்பு கேட்ட நடிகர் சிவராஜ்குமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 3:58 pm

நடிகர் சித்தார்த்தை பேச விடாமல் விரட்டிய கன்னட அமைப்புகள் : மன்னிப்பு கோரிய நடிகர் சிவராஜ்குமார்!!

காவிரி நதி நீர் பிரச்சனை தமிழகத்திற்கும், கர்நாடாகவிற்கும் பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் இந்தாண்டு சரியான மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்தது. இதனால் காவிரியை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.

இதனையடுத்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தருமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனை கர்நாடக அரசு மறுத்து வந்தது. இதனையடுத்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ படத்தையும் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் பெங்களூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்த பந்த் கர்நாடக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடக பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மேலும் இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இன்று அறிவிக்கப்பட்ட பந்த் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்பட்டது. கர்நாடகவில் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடைபெற்றது. விமான சேவை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் கெம்ப கவுடா விமான நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் போலீசார் போராட்டக்காரர்களை அந்த பகுதியில் இருந்து குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.

இந்த நிலையில், கன்னட பிலிம் சேம்பர் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கன்னட திரைப்பட நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். கன்னட முன்னனி நடிகர் ஷிவ்ராஜ்குமார், ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தின் இடையே பேசிய ஷிவ்ராஜ்குமார், காவிரி விவகாரத்தில் நியாயமான முறையில் போராட வேண்டும். தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்தை செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றியது தவறு என் தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சனைகளை தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது தவறு என தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி