சூடுபிடிக்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்.. தீவிரம் காட்டும் காங்கிரஸ்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

Author: Babu Lakshmanan
25 March 2023, 8:53 am

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் 124 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் கர்நாடகாவிற்கு வருகை தந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடி, ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், கர்நாடகா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

அதேபோல, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கு ஒருபடி முன்னேறி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான 124 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224- சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 471

    0

    0