கர்நாடகாவில் ஆட்சியமைக்கப் போவது யார்..? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ; அதிர்ச்சியில் பாஜக, காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 7:35 pm

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்காக மொத்தம் 37,777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவரும்.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் இழுபறி நிலவி வருகிறது. ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்கள் என்ற பெரும்பான்மை இரு கட்சிகளுக்கும் கிடைக்காது என தெரிய வந்துள்ளது. இதனால், இரு கட்சியினரும் அப்செட்டாகியுள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!