“கர்நாடகாவை உலுக்கிய ரேணுகா சாமி கொலை வழக்கு”- கன்னட நடிகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Author:
22 June 2024, 8:13 pm

பெங்களூருவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட ரேணுகா சாமி வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில் கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான தர்ஷன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இவருக்கு பிரியா கௌடா என்கிற தோழியும் உள்ளார். பிரியா கௌடாவுக்கும் தர்ஷனின் மனைவிக்கும் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்வதன் மூலம் கமெண்ட் பிரிவில் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை பல ரசிகர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். பெங்களூரைச் சேர்ந்த ரேனுகா சாமி திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆன நிலையில் இவரது மனைவி ஐந்து மாத கர்ப்பமாகவும் உள்ளார்.

இந்நிலையில் ரேணுகா சாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் என்பதால் பிரியா கௌடா என்பவரால் தான் நடிகர் தர்ஷனுக்கு பிரச்சனை வருகிறது என்று இன்ஸ்டாகிராமில் மெசேஜையும், கமெண்டையும் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதனை பிரியா கௌடா நடிகர் தர்ஷனிடம் தெரிவிக்கவே ஆத்திரமான தர்ஷன் அவரது ஆட்களை வைத்து ரேணுகா சாமியை மைசூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு கடத்தி வந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.இறுதியில் ரேணுகா சாமி உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை பாலத்திற்கு அடியில் வீசி சென்றுள்ளனர். ரேணுகா சாமியின் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜூன் 3 ம் தேதி பாலத்திற்கு அடியில் கிடந்த உடலை கண்டறிந்த காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு உண்மையை கண்டறிந்தனர். சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து தர்ஷன் தான் இதற்கு காரணம் என்று காவல்துறையில் உறுதி செய்தனர். கடந்த 10 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். இந்த செய்தி கர்நாடகாவில் உள்ள நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்ந்து காவல்துறையினர் தர்ஷனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது மேலும் நடிகர் தர்ஷனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!