காங்கிரசை விமர்சிக்கும் நோக்கில் கர்நாடகா பாஜக வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பேக்கரியில் அடாவடி… ஊழியரை கண்முன் தெரியாமல் தாக்கிய போதை ஆசாமிகள் ; சைரன் சவுண்ட் கேட்டதும் எஸ்கேப்!!
இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. கலவரத்தைத் தூண்டி பகையை வளர்க்க பா.ஜ.க. விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு கர்நாடக பா.ஜ.க.விற்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் அந்த பதிவு நீக்கப்படாததால், கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.