ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் தகராறு… மாறி மாறி செருப்பால் தாக்கிக் கொண்ட பெண்கள் ; ஓடும் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Babu Lakshmanan
9 February 2024, 4:39 pm

ஓடும் பேருந்தில் ஜன்னல் கண்ணாடியை திறப்பதில் ஏற்பட்ட தகராறின் போது பெண்கள் மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஜன்னல் கண்ணாடியை தன் பக்கம் திறந்துள்ளார். இதனால், அந்தப் பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணின் ஜன்னல் கண்ணாடி மூடியுள்ளது. இதனால், தன் பக்கம் ஜன்னலை திறந்து விடும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு பெண்களும் மாறி மாறி செருப்பதால் தாக்கிக் கொண்டனர். இதனால், அதிர்ந்து போன சக பயணிகள், பேருந்தை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சண்டை போட்ட இரு பெண்களையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.

பெண்கள் மாறி மாறி செருப்பால் தாக்கிக் கொண்ட இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!
  • Close menu