தேசியக் கொடி ஏற்றும் போது மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்… சுதந்திர தினத்தன்று நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 2:37 pm

கர்நாடகாவில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்றும் போது முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் தலைவர் என். கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, ​​தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதற்காக, அங்கு நின்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கங்காதர கவுடா கொடி வணக்கத்தை தெரிவித்தார்.

அந்த சமயம், கங்காதர கவுடா, மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!