தண்ணீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்.. ஆனால் : தமிழகத்துக்கு செக் வைத்த துணை முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 1:52 pm

தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட முடியுமோ, அவ்வளவு திறக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தற்போது வறட்சி காலம், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை வேண்டாம், போதுமான மழை பெய்தால் தேவையான தண்ணீர் திறக்கப்படும்.

தற்போது, காவேரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணியை தொடங்கி விட்டோம். கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது.

மேகதாது அணை இருந்திருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ