கர்நாடகா வில் வெளுத்து வாங்கும் கனமழை-6 பேர் பலியான சோகம்!

Author:
28 June 2024, 11:23 am
Quick Share

கர்நாடக மாநிலத்தின் பெரும் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மங்களூர், ஷிமோகா,குடகு, உடுப்பி போன்ற மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதில் மங்களூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். மங்களூர் புத்தூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததை மிதித்து மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். பன்னூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மதுவாகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள பகுதிகளில் 5 அடி வரை தண்ணீர் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது

.

Views: - 52

0

0

Leave a Reply