இவர்தான் நிஜ ‘மாவீரன்’… சிறுத்தையை பைக்கில் கட்டி எடுத்துச் சென்ற இளைஞர்.. அதிர்ந்து போன கிராம மக்கள்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 12:58 pm

தன்னை தாக்க வந்த சிறுத்தையின் கால்களை கட்டி, பைக்கில் பின்புறத்தில் கட்டிக் கொண்டு சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பகிவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் தனது தோட்டத்தில் சிறுத்தை ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே சிறுத்தை தன்னை தாக்க வருவதை உணர்ந்த அவர், தற்காப்புக்காக, ஆட்டை பிடிப்பது போல நினைத்து, சிறுத்தையை போராடி பிடித்துள்ளார்.

மேலும், அதன் 4 கால்களையும் கயிற்றால் கட்டி, அதனை வனத்துறை அலுவலகத்திற்கு பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சிறுத்தையை பிடித்து கொண்டு வர முத்து கையாண்ட முறை சற்று மோசமானது. இருப்பினும், அவருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. சிறுத்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். மற்றபடி, அதனை துன்புறுத்தும் எண்ணம் அவரிடம் இல்லை. சிறுத்தை பலவீனமாக இருக்கிறது,” எனக் கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!