வினாத்தாளை பார்த்ததும் 6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 4:52 pm

கர்நாடகாவில் கல்லூரி மாணவன் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள மணிப்பால் மாஹே பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்ய சுமன் (19) என்ற மாணவனும் படித்து வந்தார்.

அவருக்கு கடந்த 18ம் தேதி அவருக்கு தேர்வு நடைபெற்றது. இதற்காக அவர் தேர்வு எழுத அறைக்கு வந்துள்ளார். வினாத்தாளை பார்த்ததும், கவலை அடைந்த அவர், தேர்வறையில் இருந்து சட்டென வெளியே ஓடிச் சென்றார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில், 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை காப்பாற்ற ஓடிச் சென்றனர். ஆனால், தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் மாணவர் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்று விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!