பாலியல் வழக்கு… விமான நிலையம் வந்திறங்கியவுடன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விலங்கு மாட்டிய போலீஸ்!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 8:25 am
Quick Share

கர்நாடகா, ஹாசன் தொகுதி ம.ஜ.த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்கள் மற்றும் இன்னும் சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில், அவர் தனது எம்பி பதவிக்கான டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவின் சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் பிரஜ்வல் மீது புளு கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வதேச அளவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: ஒரு தலைக் காதலால் விபரீதம்.. இளம்பெண் கழுத்தை அறுத்த காதலன் : தானும் கழுத்தை அறுத்த கொடூரம்!

இப்படியான சூழலில், அண்மையில் வீடியோ வெளியிட்டு, தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், வரும் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாகவும் பிரஜ்வல் உறுதிபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை, சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வழக்கில் 34 நாட்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா தற்போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 143

0

0