கர்நாடகாவை ஆளப்போவது யார்..? பாஜக-வா..? காங்கிரசா..? வெளியானது சி -வோட்டர் கருத்துக்கணிப்பு!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 2:03 pm

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

கருத்துக்கணிப்பு படி ஆளும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பதில் சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவினர் இந்தக் கருத்து கணிப்பை போலி எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் அதிகபட்சமாக காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 தொகுகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 492

    0

    0