பட்டப்பகலில் பயங்கரம்… தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல் ; அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 7:20 pm

கர்நாடகாவில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அர்பிதா (23) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3 மர்ம நபர்கள், ஆசிரியை அர்பிதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆசிரியை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, அர்பிதா தங்களின் உறவினரான ராமு என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தனது மகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் ராமுவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அர்பிதாவின் தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை அர்பிதா ஏன் பள்ளிக்கு வந்தார்..? என்ற கேள்வியும் போலீசாரிடையே எழுந்துள்ளது.

எனவே, 3 தனிப்படைகளை அமைத்து, அர்பிதாவை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 408

    0

    0