பள்ளியில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர்… வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவர்களால் அதிர்ச்சி…

Author: Babu Lakshmanan
29 January 2022, 7:10 pm

கர்நாடகா : கர்நாடகாவில் மாணவி ஒருவருக்கு தலைமை அசிரியர் முத்தம் கொடுக்கும் வீடியோவை சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை சக மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து வீடியோ எடுத்துள்ளனர். அதனைக் கண்ட தலைமை ஆசிரியர் அந்த விரட்டிப் பிடிக்க முயலுகிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அவர்கள் சமூகவலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் தலைமை ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?