சரிகிறது கேசிஆரின் செல்வாக்கு.. 10 வருட பிஆர்எஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது : முதன்முறையாக ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது .
இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என முன்னிலை நிலவரங்கள் கூறுகின்றன.
தெலுங்கானாவில் , தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர ராவின் , பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி மீண்டும் முன்னிலை பெற்று கேசிஆர் “ஹாட்ரிக்” அடித்து முதல்வராவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கே.சி.ஆர், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகாளான கஜ்வெல் (Gajwel ) மற்றும் காமரெட்டி (Kamareddy) ஆகிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்ற நிலவரம் வெளியாகியுள்ளது.
மொத்தமும் 119 தொகுதிகளில் 66 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 41 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிரது. ஒன்பது தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.