கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி : உச்சநீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 2:49 pm

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி : உச்சநீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.

தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம்(ஜூன்) 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 500க்கு 499 மதிப்பெண்கள்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்த மாணவிகள்..!

ஜூன் 2ஆம் தேதி சரணடைய வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபடலாம் என அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் உள்ள நிலையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக எந்த அலுவல் பணிகளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!