பாசமாக சென்ற 2 வயது சிறுவன்.. அலட்சியமாக காரை இயக்கிய தாத்தா ; டயரில் சிக்கி பலியான சோகம் ; ஷாக் சிசிடிவி காட்சி…!!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 1:27 pm

கேரளா மாநிலம் காசர் கோட்டில் தாத்தா வீட்டிற்குள் ஓட்டி வந்த காரின் அடியில் சிக்கி 2 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்தவர் நாசர். இவருக்கு சுமார் ஆறு மற்றும் இரண்டு வயதுடைய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகனும், 2 வயதான சிறுவனும் கடந்த வாரம் வீட்டின் முன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா வீட்டிற்குள் காரை நிறுத்துவதற்காக வந்துள்ளார். இருவரும் சைக்கிளில் விளையாடி வந்த நிலையில், தனது தாத்தா காரை நிறுத்துவதற்கு வசதியாக, 5 வயது சிறுவன் தனது சைக்கிளை ஓரமாக நிறுத்தினான்.

அப்போது 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றதை கவனிக்காத தாத்தா, காரை முன்னால் எடுக்க முயற்சிக்க எதிர்பாராத விதமாக குழந்தை காரின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கியது. இதனைக் கண்ட 5 வயது சிறுவன் அலறியபடி ஓட முதியவரும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். இந்நிலையில் பலந்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக எதிர்பாராத விதமாக கார் ஏற்றிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தானது கடந்த வாரம் நடந்துள்ளது. தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://player.vimeo.com/video/885540321?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?