வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. பாதிகப்பட்டோர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி – கேரள வங்கி அறிவிப்பு..!

Author: Vignesh
12 August 2024, 6:27 pm

கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரம் அடைந்து இருந்தது. இந்த நிலையில், தொடர் கனமலையால் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், ஏராளமான மலையடி வார கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இரவு நேரத்தில் உறங்கியவர்கள் மண்ணுக்குள் புதைந்து மாய்ந்து போகினர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி வீடு குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரளா வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து, கேரள வாங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது, ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.

சிலர் குடும்பங்களை இழந்தும் வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், உள்ளவர்கள் வங்கி கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 337

    0

    0