அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை, மகன்.. திக்திக் காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 6:14 pm

கேரளாவில் அதிவேகமாக தனியார் பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை, மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா ரயில் நிலையம் பக்கத்தில் உள்ள சாலை வழியாக தந்தையும், மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தந்தையையும், மகனையும் அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே, தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?