சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற நபர்… வேகமாக வந்து மோதிய அரசுப் பேருந்து ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!

Author: Babu Lakshmanan
1 February 2024, 9:58 pm

கேரளாவில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற சைக்கிளில் வந்த நபர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் உள்ள சாலையில் (கேரளா அரசு பேருந்து) கேஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இணைப்பு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த ஒருவர் சைக்கிளில் சாலையை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதியது.

அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கேரளா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த காட்சிகள் சிசிடியில் பதிவாகி உள்ளது. அதில் சைக்கிள் ஓட்டுபவர் கவன குறைவாக சாலையை கடக்கும் போது, தனது கையால் பேருந்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. அதிவேகமாக வந்த KSRTC பேருந்து இருசக்கர வாகன ஓட்டி மீது மோதியது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 429

    0

    0