அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 4:24 pm

கேரளா : கேரளாவில் பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனத்தையும், அதில் பயணித்த இருவர்களையும், பின்னால் இருந்து அதிகவேகத்தில் வந்த கார் இடித்து பறக்க விடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

மலப்புறம் , குளப்புறம் சாலையில் திருவரங்காடி பகுதியில் வைத்து நேற்று இரவு அளவில் பிலாக்கல் பகுதியில் இருந்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டதுடன், இவர்களது வாகனமும் பல அடிதூரம் பறந்து சென்று விழுந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் முன்பே சென்று சாலையோர பள்ளத்திலும் சிக்கி இடித்து நின்றது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவரங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து குளப்புறம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?