கேரளா : கேரளாவில் பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனத்தையும், அதில் பயணித்த இருவர்களையும், பின்னால் இருந்து அதிகவேகத்தில் வந்த கார் இடித்து பறக்க விடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
மலப்புறம் , குளப்புறம் சாலையில் திருவரங்காடி பகுதியில் வைத்து நேற்று இரவு அளவில் பிலாக்கல் பகுதியில் இருந்து அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டதுடன், இவர்களது வாகனமும் பல அடிதூரம் பறந்து சென்று விழுந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் முன்பே சென்று சாலையோர பள்ளத்திலும் சிக்கி இடித்து நின்றது.
இந்த விபத்தில் காயம் அடைந்த மூவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவரங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து குளப்புறம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
This website uses cookies.