தனக்கு விருது அறிவித்ததை தெரியாத குழந்தை நட்சத்திரம்… பள்ளி முடிந்து வரும் போது கேட்டு நெகிழ்ச்சி… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 9:45 pm

கேரளாவில் தனக்கு திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது பற்றி தெரியாமல் பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை நட்சத்திரத்திற்கு பொதுமக்கள் தகவல் கூறவே மகிழ்ச்சியில் உறைந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளில் தன்மயா சோல் சிறந்த குழந்தை நடிகைக்கான (பெண்) விருதை வென்றார். சனல் குமார் சசிதரனின் வைவக் படத்தில் நடித்ததற்காக தன்மயாவுக்கு விருது வழங்கப்பட்டது.

ஆனால் இந்த விருது அறிவிக்கப்பட்டபோது பள்ளியில் இருந்தார் தன்மயா சோல், மாநில விருதை கேரளாவில் உள்ள திரையுலகினர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தான் பெற்ற விருதை இந்த குழந்தை நட்சத்திரம் அறியவில்லை. பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் காத்திருந்த அன்பர்களால் தான்மயாவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதன் வேடிக்கையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன்மயாவுக்காக காரில் அமர்ந்திருப்பவர்கள் அவளைப் பார்த்ததும் விஷயம் தெரியுமா..? என்று முதலில் கேட்கிறார்கள். மாநில விருது பெற்றதாகவும் கூறினார்கள். ஆனால் இதை நம்பாத தன்மயாவிடம் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள் பின்னர், போனில் வந்த செய்தியைப் பார்த்து நம்புகிறார். தொடர்ந்து வரும் மகிழ்ச்சியான சிரிப்பின் வீடியோ வைரலாகி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!