ஐயப்ப பக்தர்களே உஷார்…!! கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு..!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 9:54 am

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு பதிவான ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 949ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனா பரவலை தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 3103

    0

    0