கேரளா ; போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் தாத்தா – பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கேகாடு பகுதியை சார்ந்தவர்கள் வயதான தம்பதியர்களான அப்துல் மற்றும் ஜமீலா. இவர்களது மகள் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது முதல் திருமணத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மகளது இரண்டாவது திருமணத்துக்கு பிறகு அக்மல் என்ற மகனை தாத்தா பாட்டியான, அப்துல் – ஜமீலா தம்பதியர் வளர்த்து வந்துள்ளனர்.
28 வயதான அக்மல் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. போதை பொருட்கள் பயன்படுத்தி தன்னிலை மறந்து பல பிரச்சனைகளையும் தினசரி வீட்டில் செய்து வந்துள்ளார். பொருட்கள் வாங்க பணம் கேட்டும் வயதான தம்பதியினரை துன்புறுத்தியும் வந்துள்ளார்.
உறவினர்கள் போதை பொருள் பழக்கத்தில் இருந்து அக்மலை விடுவிக்க பல வழிகளை முயற்சி செய்தும், எதுவும் பலன் அளிக்கவில்லை. மேலும் போதைக்கு அடிமையாகி தன்னிலை மறந்து வயதான தம்பதிகளை கொல்ல வாய்ப்புகளும் உண்டு என உறவினர்கள் அவர்களுடன் வயதான தம்பதிரை வர சொல்லி கூறியுள்ளனர்.
பேரபிள்ளையை தாங்கள் விட்டு வந்தால் அவன் தனியாகி விடுவான். 28 வருடங்களாக வளர்த்த தங்களை அவன் எதுவும் செய்ய மாட்டான் என தம்பதியினர் நம்பியுள்ளனர். ஆனால் அதை பொய்யாக்கும் வகையில், நேற்று முன்தினம் போதை பொருட்கள் வாங்க காசு கேட்டுள்ளார் அக்மல். ஆனால், தம்பதியினர் அதைக் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்து தன்னிலை மறந்த அக்மல் கத்தியால் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு அங்கிருந்து தலைமறைவும் ஆகி உள்ளார். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அக்மல் பாட்டியின் நகைகளுடன் போலீசாரிடம் சிக்கினார். பின்பு கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து நேற்றைய தினம் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் அக்மலை அழைத்து வந்து கொலை செய்தது எப்படி என்பதும், மேலும் பல ஆதாரங்களை திரட்டிய பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வளர்த்திய பேரப்பிள்ளை தங்களை அபாயப்படுத்த மாட்டான் என நினைத்த வயதான தம்பதியினரின் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு வளர்த்த தாத்தா- பாட்டியை, பேரப்பிள்ளை போதைக்காக கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.