சிகிச்சைக்காக வந்த நபரால் பெண் மருத்துவர் கொடூரக் கொலை … முதலமைச்சர் பதவி விலக வலுக்கும் கோரிக்கை…!
Author: Babu Lakshmanan10 May 2023, 4:53 pm
கேரள மாநிலத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்த டாக்டர் வந்தனா தாஸ். நேற்று இரவு பணியில் இருக்கும் போது, பூயப் பள்ளி பகுதியைச் சார்ந்த ஆசிரியர் சந்தீப், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆசிரியராக பணியாற்றி வந்த அவர் போதை மருந்துக்கு அடிமையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
போதைக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு வீட்டில் தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டார். நிலைமை எல்லை மீறி போனதால் வீட்டில் உள்ளவர்கள் போலீசை அழைத்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவமனைக்குள் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார். மருத்துவ உபகரணங்களையும் அடித்து உடைத்துள்ளார்.
அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதில் மருத்துவப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் வந்தனா தாஸ் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். பின்னர், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். அவரது உடலில் ஐந்து இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டிருந்ததை பெண் மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, இந்திய மருத்துவ சங்கம் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜெயலால் கூறும்போது ;- இளம் பெண் மருத்துவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அல்லும் பகலும் போராடுகிற மருத்துவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு தர வேண்டும் என பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் போராடிக் கொண்டிருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் இதை செவிசாய்க்காமல் உறங்கி வருகிறது.
இளம்பெண் பயிற்சி மருத்துவர் உயிர் பலியாகி உள்ளார். இதற்கு பொறுப்பேற்று கேரள மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது, இதற்கு முழு மத்திய, மாநில அரசுகள் அதிகாரிகள் பொறுப்பாவார்கள். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு தர தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். அரசு தொடர்ந்து மௌனமாக இருக்கும் என்றால், நிச்சயமாக வீதியில் வந்து எங்களின் உரிமைகளுக்காக உயிருக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதன் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும், என டாக்டர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.