திடீர் காலநிலை மாற்றம்… திருச்சூர் கடலில் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்.. வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan12 September 2022, 3:39 pm
அரபி கடலில் நிகழ்ந்த திடீர் காலநிலை மாற்றம் காரணமாக, கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
கால நிலை மாற்றம் ஏற்படும் போது மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வரும் நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் அருகே மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாடன பள்ளி பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக, குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கின. இதை பார்த்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் குழம்பு வைக்க கூடையில் அள்ளி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.